Breaking Bad Series Bad Review - Tamil

 


Breaking Bad சீரீசும் வாழ்க்கையும் .

துலாபாரம் என்ற ஒரு படம் தமிழில் நினைத்து நினைத்து அழவைத்தது. படம் பார்க்கும்போதெல்லாம் அனைவருக்கும் ஒரு guilt கொடுத்தது, அதுதான் Breaking Bad. ஆரம்பத்தில் இருந்து குடும்பம், மனைவி, மகன் என்று பிழியப்பிழிய அழ வைத்தது. இதில் வால்டர் வைட் அவ்வப்போது பெரிய புடுங்கி போல மனைவிதான் முக்கியம், குடும்பம்தான் முக்கியம் என்று துடிப்பார். இனிமேல் meth வேண்டாம் என்று அழுவார். 


ஜெஸ்ஸி பிங்க்மேன் பாவம், அவன் பாட்டுக்கு ஜாலி வாழ்க்கையை வாழும்போதுமே வால்ட்டர் வைட் உள்ளே புகுந்து அவனையும் சாவடிப்பார். இத்தனைக்கும் வால்ட்டர் வைட்டின் மனைவி ஜாலியாக பாஸை ஜிகுஜிகா பண்ணுவார். இவ்வளவு பணம் எங்கிருந்து வந்தது என்று வால்ட்டர் வைட் சொல்லாமல், பின்னர் தெரிய வந்ததால், பழிக்குப்பழி. 


Breaking Bad சீரீசிலேயே சால் குட்மேன் மட்டுமே பிழைக்கத் தெரிந்த ஆசாமி. வால்ட்டர் வைட், நிம்மதியாக, ஜாலியாக வாழ நினைத்த ஜெஸ்ஸியை உள்ளே புகுந்து மனைவிக்குப் பயந்து சூத்*டி அடித்த ஆசாமி. ஜெஸ்ஸியின் பழைய காதலியைக் காப்பாற்றக்கூடிய வாய்ப்பு இருந்தும் ODயில் துடிக்கத் துடிக்க சாவும்போது சும்மா பார்த்துக்கொண்டிருந்த ஆள். காட்டிக்கொடுத்துவிடுவாளோ என்ற பயத்தில். 


நல்ல ஆசாமிகளால்தான் உலகத்துக்கே பிரச்னை. ஹிட்லர் போல. வால்ட்டர் வைட் போல. Rules என்பதை அந்நியன் அம்பி போல வெறித்தனமாகக் கவ்விக்கொண்டு வாழ்ந்ததால்.  Meth Labஇல் தன் தொழில் தெரிந்தால் தங்களுக்கு வாழ்க்கை இல்லை என்பதால் ஜெஸ்ஸியை வைத்து அசிஸ்டெண்ட்டைக் கொல்ல வைத்ததால். மற்றவரைக் கொன்றதால். பின்னர் தானும் செத்ததால். மனைவிக்குப் பயந்து Second cellphone என்று அனஸ்தீஷியாவில் உளறிய ஆள். 


இந்த மாதிரி எழுதினால் செண்ட்டிமெண்ட்டாக ஹிட்ட்டாகும் என்று தெரிந்தே எழுதப்பட்ட குடும்ப மெகா சீரியல் டிராமா  சீரீல்தான் ப்ரேக்கிங் பேட். பக்காவாக அதேபோல் ஹிட்டானது.  மனைவி ஓவராகப் பேசியதால் பயந்து காலில் விழ நினைத்த அம்பி வால்ட்டர் வைட் என்ற ஒரு தொடைநடுங்கி ஆசாமியை வைத்து எழுதப்பட்ட சீரீஸ் வெற்றிபெற்றதில் சந்தேகம் என்ன? உலகம் முழுக்க மனைவி என்ற ஆசாமியைப் பார்த்து பயந்து, தனக்குப் பிடித்ததை செய்யாமல் நடுங்கி, குடும்பம் குட்டி என்று அழும் ஆசாமிகளை டார்கெட் செய்து எழுதப்பட்ட துலாபாரமே ப்ரேக்கிங் பேட். இவர்கள்தான் மிகவும் ஆபத்தான ஆட்கள். ஹிட்லர் போல. இவர்களை நம்பி நிஜமாகவே எதுவுமே செய்ய முடியாது.

Breaking Bad Series Bad Review - Tamil Breaking Bad Series Bad Review - Tamil Reviewed by Cinema Thoughts on December 11, 2021 Rating: 5

No comments:

Comment Here

Powered by Blogger.