ஒரு கோடி சம்பளம் கொடுத்தும் சிஎஸ்கேக்கு இசையமைக்க மறுத்த அனிருத்..

காரணம் கேட்டா ரொம்ப ஷாக்கீங்க இருக்கே சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக பாடல் போடமுடியாது என கூறிய அனிரூத் அதற்கான காரணத்தை கூறி ஆச்சரியத்தில் மூழ்கடித்துள்ளார். அண்மையில் நடந்து முடிந்த ஐபிஎல் 2023 போட்டியில் ஐந்தாவது முறையாக தோனி தலைமை வகித்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கோப்பையை வென்றது. கடந்தாண்டு இந்த அணி படுதோல்வியடைந்த நிலையில், இந்தாண்டு கடைசி தருணத்தில் என்ன நடக்கும் என்ற பல எதிர்பார்ப்புக்கு இடையே குஜராத்துக்கு எதிரான போட்டியில் அபார வெற்றியை சிஎஸ்கே அணி வென்றது. இதனிடையே இப்போட்டியில் கடைசி பந்தை வீசி வெற்றி வாய்ப்பை பெற்றுக்கொடுத்த ஜடேஜாவை, தோனி தூக்கி பிடித்து, கட்டியணைத்து, ஆனந்த கண்ணீரில் மூழ்கிய காட்சி இணையத்தில் தற்போது வரை வைரலாக உள்ளது. மேலும் பல வருடங்கள் கழித்து சென்னை சேப்பாக்கத்தில் அமைந்துள்ள கிரிக்கெட் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் போட்டியை பார்க்க ரசிகர்கள் லைன் கட்டி நின்று ஆயிரக்கணக்கில் டிக்கெட்டுகளை வாங்கி தோனியின் தரிசனத்தை பெற்றனர் மேலும் இவர்களோடு இணைந்து திரைபிரபலங்களும் பலர் போட்டியை காண மைதானத்தில் வந்து ரசிகர்களை ஆரவாரப்படுத்தினர். அந்த வகையில் பிரபல இசையமைப்பாளரான அனிரூத் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கான தீம் சாங் கம்போஸ் பண்ணும் வாய்ப்பு வந்தும் அதை அவரே நிராகரித்த சம்பவத்தை பேட்டியில் பகிர்ந்துள்ளார். மேலும் தனக்கு கொடுத்த ஒரு கோடி ரூபாய் பணத்தையும் திருப்பிக்கொடுத்து விட்டதாக அவரே ஒரு பேட்டியில் இதுகுறித்து பேசியுள்ளார். தற்போது அனிரூத் மின்னல் வேகத்தில் பல படங்களில் கமிட்டாகி வரும் நிலையில், இந்திய அளவில் பிரபலமாகும் வாய்ப்பு கிடைத்தும், விசில் போடு பாடலுக்கு மரியாதை கொடுத்து வேறு தீம் சாங்கை கம்போஸ் பண்ணாமல் விட்டது பலருக்கும் ஆச்சரியமாக உள்ளது
ஒரு கோடி சம்பளம் கொடுத்தும் சிஎஸ்கேக்கு இசையமைக்க மறுத்த அனிருத்.. ஒரு கோடி சம்பளம் கொடுத்தும் சிஎஸ்கேக்கு இசையமைக்க மறுத்த அனிருத்.. Reviewed by Cinema Thoughts on June 06, 2023 Rating: 5

No comments:

Comment Here

Powered by Blogger.