டாப் ஹீரோ முதல் காமெடியன் வரை.. நடிகையின் வாழ்க்கையில் விளையாடிய நடிகர்கள்

நடிக்க வந்து விட்டாலே நடிகைகள் அனைவரும் பப்ளிக் பிராப்பர்ட்டி தான் என்று சொல்லும் அளவுக்கு அவர்கள் பல டார்ச்சர்களை அனுபவித்து வருகின்றனர். அதிலும் படுக்கைக்கு வந்தால் தான் வாய்ப்பு என்ற வக்கிர புத்தியுடன் இருக்கும் பிரபலங்களும் இருக்கிறார்கள். பெரிய மனுஷன் என்ற முகமூடியை போட்டுக்கொண்டு இப்படி சில்லறைத்தனமான வேலைகளை பார்ப்பவர்களை தான் நாம் தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடி வருகிறோம். இது போன்ற தொல்லைகளுக்கு ஆளான பல நடிகைகள் பற்றி நாம் கேள்விப்பட்டிருந்தாலும் வாழ வேண்டிய வயதில் அட்ஜஸ்ட்மென்ட் தொல்லை தாங்காமல் அவதிப்பட்ட ஒரு நடிகையின் கதை பலருக்கும் கண்ணீர் வரவழைக்கிறது. ஆரம்பத்தில் சினிமாவில் நடித்து முன்னேற வேண்டும் என்ற கனவுடன் தான் அவர் திரைத் துறைக்குள் காலடி வைத்திருக்கிறார். ஆனால் அட்ஜஸ்ட்மென்ட் செய்தே ஆக வேண்டும் என்ற கட்டாயம் அவருக்கு ஏற்பட்டிருக்கிறது. பொருளாதார தேவைக்காக அதற்கு சம்மதித்த நடிகை மனமே இல்லாமல் பலரின் ஆசைக்கு இணங்கி இருக்கிறார். ஒரு ஐட்டம் டான்சராக இருந்த இவரை புகழின் உச்சியில் இருக்கும் நடிகர்கள் முதல் காமெடியன்கள் கூட விட்டு வைக்கவில்லை என்பதுதான் வேதனை. அப்படித்தான் பிரபல இயக்குனர் ஒருவரும் அவருடைய நெருங்கிய நண்பரான அந்த நடிகரும் நடிகையின் மீது கண் வைத்திருக்கிறார்கள். முதலில் அவர்களின் ஆசைக்கு மறுத்த நடிகையை கட்டாயப்படுத்தி அவர்கள் இருவரும் தங்கள் அறைக்கு வரவழைத்து ஆசையை தீர்த்திருக்கின்றனர். இதுவே தொடர் கதையாகி போனதால் வெறுத்து போன நடிகை சினிமாவே வேண்டாம் என்ற முடிவுக்கு வந்திருக்கிறார். அதன்படி தன் காதலரை அவர் திருமணம் செய்து கொண்டு சினிமாவை விட்டு ஒதுங்கியும் இருக்கிறார். ஆனாலும் அவரை தேடி இந்த தொல்லை வீடு வரை வந்திருக்கிறது. அப்போது நடிகையின் கணவர் ஓரிரு திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருந்தார். அவருக்கு வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்பதற்காக அவர் தன் மனைவியை ஒரு தயாரிப்பாளரிடம் போக சொல்லி இருக்கிறார். முடியாது என்று மறுத்த நடிகைக்கு தினம் தினம் சித்திரவதை தான் நடந்திருக்கிறது. இதனால் வெறுத்துப்போன நடிகை இப்போது தன் கணவரை பிரிந்து தனி மரமாக நிற்கிறார். ஒரு காலத்தில் ஐட்டம் டான்ஸராக பிசியாக இருந்த நடிகை இப்போது ஆள் அட்ரஸ் தெரியாமல் இருக்கிறார். இவர் மட்டுமல்லாமல் வளர்ந்து வரும் பல நடிகைகளும் இது போன்ற பிரச்சனைகளுக்கு ஆளாவது இன்னும் சினிமாவில் தொடர் கதையாக தான் இருக்கிறது
டாப் ஹீரோ முதல் காமெடியன் வரை.. நடிகையின் வாழ்க்கையில் விளையாடிய நடிகர்கள் டாப் ஹீரோ முதல் காமெடியன் வரை.. நடிகையின் வாழ்க்கையில் விளையாடிய நடிகர்கள் Reviewed by Cinema Thoughts on March 19, 2023 Rating: 5

No comments:

Comment Here

Powered by Blogger.