![]() |
Vijay in Leo |
விஜய், லோகேஷ் கூட்டணியில் தற்போது லியோ படம் உருவாகி வருகிறது. மாஸ்டர் பட வெற்றிக்கு பிறகு மீண்டும் இவர்கள் இணைந்துள்ளதால் ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பு உள்ளது. மேலும் வருகின்ற அக்டோபர் மாதம் லியோ படம் ரிலீஸாக உள்ளது. இப்போது விஜய்யின் அடுத்த படம் குறித்து அரசல் புரசலாக தகவல் வெளியாகி உள்ளது.
ஏற்கனவே அட்லீ மற்றும் விஜய் மீண்டும் இணைவதாக தகவல் வெளியானது. ஆனால் இப்போது வேறு ஒரு இயக்குனரிடம் விஜய் கதை கேட்டுள்ளாராம்.
மீண்டும் தெலுங்கு இயக்குனர் படத்தில் விஜய் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதாவது விஜய் தேவர் கொண்டா நடிப்பில் வெளியாகி நல்ல வரவேற்பு பெற்ற அர்ஜுன் ரெட்டி படத்தின் இயக்குனர் சந்தீப் ரெட்டி வங்கா விஜய்க்கு கதை எழுதி உள்ளாராம்.
மேலும் தளபதி இடம் இது குறித்து விவாதித்த போது படம் ரொம்ப பிரமாதமாக உள்ளதாக கூறியுள்ளார். அதுமட்டுமின்றி இந்த கதையை யாரிடமும் சொல்ல வேண்டாம் என்றும் லியோ படம் முடியும் வரை காத்திருங்கள் என்று விஜய் கூறியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதற்காக சந்தீப் ரெட்டி காத்திருக்கிறாராம்.
இப்போது ஹிந்தியில் அனிமல் என்ற படத்தை அவர் இயக்கி வருகிறார். அந்தப் படத்தை முடித்த கையோடு தளபதி 68 படத்தை சந்தீப் ரெட்டி இயக்க அதிக வாய்ப்பு உள்ளது.
.jpeg)
No comments:
Comment Here