துணிச்சலான கதாபாத்திரங்களில் நடித்து மக்கள் மனதில் இடம் பிடித்தவர் கருப்பு நடிகை. எந்த விஷயமாக இருந்தாலும் பேட்டிகளில் வெளிப்படையாக பேசும் இவர் ஒரு படத்தில் கேரளா நடிகருடன் ஜோடி போட்டு நடித்திருந்தார். இதன் மூலம் இவர்கள் இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
மேலும் அந்தப் படத்தில் கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட் ஆனதால் இருவரும் தொடர்ந்து இரண்டு மூன்று படங்களில் நடித்து வந்தார்கள். இதை தொடர்ந்து இருவரும் காதலித்து வருவதாக ஊடகங்களில் வெளிப்படையாகவே கூறி வந்தனர். அதுமட்டுமின்றி இருவரும் திருமணம் செய்து கொள்ளப் போகிறார்கள் என்றும் செய்திகள் வெளியானதுஆனால் திடீரென கேரளா நடிகர் சினிமா துரை அல்லாது வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டுள்ளார். இந்த விஷயம் தெரிந்த நடிகை என்ன செய்வதென்று தெரியாமல் பதறிப் போய் உள்ளார். இதனால் கேரளா நடிகரிடம் நியாயம் கேட்டு கருப்பு நடிகை போய் உள்ளார்.
நடிகரோ சினிமா நடிகைகள் எல்லாம் என்ஜாய்மெண்டுக்கு மட்டும்தான். அவர்களை திருமணம் செய்து கொண்டு குடும்ப வாழ்க்கை எல்லாம் நடத்த முடியாது என குண்டை தூக்கி போட்டுள்ளார். இதனால் சில காலம் மன உளைச்சலில் இருந்த நடிகை மீண்டும் நடிக்க வந்தார்மேலும் மீண்டும் அதே கேரளா நடிகருடன் ஜோடி போடும் வாய்ப்பு நடிகைகள் வந்தது. ஆனால் திருமணத்திற்கு பிறகும் அந்த நடிகையுடன் நடிகர் சில காலம் டேட்டிங் செய்து வந்தார். அதன் பிறகு நடிகை இனி கால தாமதம் வேண்டாம் என்று வேறு ஒருவரை திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆகிவிட்டார்

No comments:
Comment Here