40 வயதை நெருங்கி விட்ட நடிகர் சிம்வுக்கு இன்னமும் திருமணம் ஆகவில்லை என்பது அவரது பெற்றோர்களான டி. ராஜேந்தர் மற்றும் உஷா தம்பதியினருக்கு ரொம்பவே வருத்தமாக உள்ளது.
சிம்புவின் சகோதரி மற்றும் சகோதரர்களுக்கு திருமணம் ஆகி விட்ட நிலையில், இன்னமும் முரட்டு சிங்கிளாகவே சிம்பு இருக்கிறாரே என பலரும் வேதனைப்பட்டு வருகின்றனர்.
வல்லவன் படத்தில் நடிக்கும் போது நடிகை நயன்தாராவுக்கும் சிம்புவுக்கும் காதல் ஏற்பட்டது. இருவரும் படு நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களும், லிப் லாக் அடிக்கும் புகைப்படங்களும் இணையத்தில் இன்னமும் வைரலாகி வருகின்றன. போடா போடி முடித்த கேப்பில் விக்னேஷ் சிவன் நைஸாக அடுத்த படத்திற்கு நயன்தாராவை புக் பண்ணி அவரையே கல்யாணமும் செய்து விட்டார்.
வாலு படத்தின் சமயத்தில் தனது முன்னாள் காதலி பிரிந்து சென்ற வேதனை சொல்லி புலம்பிய சிம்புவுக்கு ஆறுதலாக அவரை காதலிக்க ஆரம்பித்தார் ஹன்சிகா. ஆனால், சில மாதங்களே நீடித்த அந்த காதலும் சில பல காரணங்களுக்காக பிரேக்கப் ஆகி விட்டது. சமீபத்தில் தொழிலதிபர் சோஹேல் கத்தூரியாவுக்கு இரண்டாவது மனைவியாக கழுத்தை நீட்டி உள்ளார் ஹன்சிகா.
நடிகர் சிம்புவுக்கு தொடர்ந்து பெண் பார்க்கும் படலம் நடைபெற்று வரும் நிலையில், சரியான பெண் இதுவரை அமையவில்லை என பேச்சுக்கள் அடிபட்டு வந்தன. ஈஸ்வரன் படத்தில் நடித்த நடிகை நிதி அகர்வால் தான் சிம்புவை திருமணம் செய்து கொள்ளப் போகிறார் என பேச்சுக்கள் அடிபட்டு வந்தன. ஆனால், அதுவும் கடைசியில் வதந்தியானது.
இந்நிலையில், ஒரு வழியாக சிம்புவுக்கு ஏற்ற மணப்பெண்ணை இலங்கையில் தேடிப் பிடித்துள்ளார்களாம். இலங்கையை சேர்ந்த பிரபல தொழிலதிபரின் மகளைத்தான் இந்த ஆண்டுக்குள் சிம்பு திருமணம் செய்து கொள்ளப் போகிறார் என பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன. விரைவில் இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. திருமண தேதி என்ன ஜூன் 9ஆ?
.jpeg)
No comments:
Comment Here