நடிகர் அஜித்குமாரின் துணிவு திரைப்படம் பொங்கலுக்கு வெளி ஆகி நல்லவசூல் குமித்தது.இதனை தொடர்ந்து லைகா தயாரிப்பில் எகே 62 என தலைப்பிட்டு இருக்கும் படத்தை சமீபத்தில் அதிகார பூர்வமாக அறிவித்தனர்.அதில் இயக்குநராக விக்னேஷ் சிவனும் இசையமைப்பாளராக அனிருத்தும் கை கோர்த்து உள்ளனர்.
இந்தப் படத்தில் அஜித்துக்கு ஜோடியாக ஐஸ்வர்யா ராய் நடிக்கவிருப்பதாகவும் சந்தானம் இந்தப் படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கவிருப்பதாகவும் நாளுக்கு நாள் வெவ்வேறு தகவல்கள் வெளியான வண்ணம் இருந்தன.இதனால் ரசிகர்கள் உற்சாகமா இருந்தனர்.
இதற்கிடையில் தயாரிப்பு நிறுவனத்திற்கு இந்த படத்தின் கதை பிடிக்காததால்.. விக்னேஷ் சிவனுக்கு பதிலாக ஆரம்பம்,பில்லா போன்ற படங்களை இயக்கிய விஷ்ணுவர்தன் இந்த படத்தினை எடுப்பர் என தெரியவந்துள்ளது.அதிகார பூர்வ அறிவிப்பு சில நாட்களில் வெளியிடலாம்.இதனை அறிந்த அவர் வட்டத்தில் இருக்கும் ரசிகர்கள் சிலர் குஷியாக உள்ளனர்.சில் பேர் என இருந்தாலும் விக்னேஷ் சிவனை இயக்குநராக அதிகார பூர்வ அறிவிப்பு செய்த பின்பு அதனை மாற்றி வேறு ஒரு இயக்குனரை அணுகுவது சரியில்லை என கூறி வருகின்றனர். விக்னேஷ் சிவன் அஜித்தின் தீவிர ரசிகர் என்பது குறிப்பிட தக்கது.

No comments:
Comment Here